விராட் கோலி படையின் மகத்தான சாதனைகளும் இலங்கை அணியின் சங்கடங்களும்! 

இந்திய அணி எந்தளவுக்குச் சாதனைகள் புரிந்துள்ளதோ அதே அளவுக்கு தோல்வியினால் இலங்கை அணி பல்வேறு சங்கடங்களை...
விராட் கோலி படையின் மகத்தான சாதனைகளும் இலங்கை அணியின் சங்கடங்களும்! 

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்த வெற்றியால் இந்திய அணி எந்தளவுக்குச் சாதனைகள் புரிந்துள்ளதோ அதே அளவுக்கு தோல்வியினால் இலங்கை அணி பல்வேறு சங்கடங்களை எதிர்கொண்டுள்ளது. 

இந்திய அணியின் மிகப்பெரிய டெஸ்ட் வெற்றிகள்

2017 - இலங்கைக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
2007 - வங்கதேசத்துக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
1998 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

* இன்றைய தோல்வி, இலங்கை அணியின் 100-வது டெஸ்ட் தோல்வி. அதில் இதுவரையில்லாத தோல்வியைப் பெற்றுள்ளது.

இலங்கை அணியின் மிகப்பெரிய டெஸ்ட் தோல்விகள்

2017 - இந்தியாவுக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
2001 - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
1993 - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 208 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

2016 முதல் அதிக டெஸ்ட் வெற்றிகள் 

16 - இந்தியா
11 - இங்கிலாந்து / தென் ஆப்பிரிக்கா
9 - இலங்கை / ஆஸ்திரேலியா
6 - நியூஸிலாந்து / பாகிஸ்தான்
4 - மேற்கிந்தியத் தீவுகள் அணி

31 டெஸ்டுகளுக்குப் பிறகு அதிக வெற்றிகள் கண்ட கேப்டன்கள்

23 ரிக்கி பாண்டிங்
21 ஸ்டீவ் வாஹ்
20 விராட் கோலி
19 மைக்கேல் வான்

* நாகபுரி டெஸ்ட் வெற்றி, இந்திய அணி 2017-ல் சந்திக்கும் 32-வது சர்வதேச வெற்றி. இதற்கு முன்பு இந்திய அணி இந்தளவுக்கு வெற்றிகளைப் பெற்றதில்லை. இதற்கு முன்பு 2016-ல் 31 வெற்றிகள் கிடைத்தன. அச்சாதனையைத் தற்போது முறியடித்துள்ளது.  

இந்தியா - சர்வதேச வெற்றிகள்

2017 - 32 வெற்றிகள் (46 போட்டிகளில்)

2016 - 31 வெற்றிகள் (46)
2010 - 29 வெற்றிகள் (48)
2013 - 29 வெற்றிகள் (43)
2007 - 28 வெற்றிகள் (55)

* இந்தியாவில் இலங்கை அணி சந்திக்கும் 11-வது டெஸ்ட் தோல்வி (19 டெஸ்டுகளில்).

9 முறை இன்னிங்ஸ் தோல்வி
2 முறை 188 ரன்கள் மற்றும் 259 ரன்கள் வித்தியாசத்தில்

* இந்த வருடம் இலங்கை அணி சந்திக்கும் 7-வது டெஸ்ட் தோல்வி. 2015-ல் பெற்ற ஏழு டெஸ்ட் தோல்விகளைச் சமன் செய்துள்ளது.

* இந்திய அணி இந்த வருடம் 32 சர்வதேசப் போட்டிகளில் வென்றுள்ளது. ஆனால் இலங்கை அணி இந்த வருடம் 35 சர்வதேசப் போட்டிகளை இழந்துள்ளது. இதுதான் இலங்கை அணியின் மிக மோசமான வருடம். அடுத்ததாக, 2012-ல் 25 சர்வதேசப் போட்டிகளைத் தோற்றது. இலங்கை அணி மேலும் இந்தியாவில் ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளது. இதே ரீதியில் விளையாடினால் மேலும் பல தோல்விகளைச் சந்திக்க நேரிடும்.

இலங்கை - சர்வதேசத் தோல்விகள்

2017 - 35 தோல்விகள் (50 போட்டிகளில்)
2012 - 25 தோல்விகள் (54)
2016 - 25 தோல்விகள் (44) 
2009 - 22 தோல்விகள் (51) 
2015 - 22 தோல்விகள் (40)

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நாகபுரியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்தது. முதல் நாளிலேயே 79.1 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்த அந்த அணியில், அதிகபட்சமாக கேப்டன் சண்டிமல் 57, கருணாரத்னே 51 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் அபாரமாக 4 விக்கெட்டுகள் சாய்த்தார். இஷாந்த் சர்மா, ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 176.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 610 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கோலி 213, புஜாரா 143, விஜய் 128, ரோஹித் சர்மா 102* ரன்கள் குவித்தார்கள். இலங்கையின் பெரேரா 3 விக்கெட்டுகளும், கமகே, ஹெராத், ஷனகா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 405 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை, 49.3 ஓவர்களில் 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா, ஜடேஜா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com