Enable Javscript for better performance
அணியினர் ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும்: இந்திய கேப்டன் விராட் கோலி- Dinamani

சுடச்சுட

    

    அணியினர் ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும்: இந்திய கேப்டன் விராட் கோலி

    By DIN  |   Published on : 28th November 2017 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kholi

    அந்நிய மண்ணில் நடைபெறும் போட்டியில் அணியினர் ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய கேப்டன் விராட் கோலி கூறினார்.
    இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
    நான் எனது விருப்பத்திற்கு ஏற்றவாறு பேட் செய்ய விரும்புகிறேன். ஒரு சரியான நிலையை அடைந்து, பந்துகளை விளாசி விரைவாக ஸ்கோர் செய்ய விரும்புகிறேன். நாம் அதிகம் ஸ்கோர் செய்யும் பட்சத்தில், நமது பந்துவீச்சாளர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களை வீழ்த்த போதிய நேரம் கிடைக்கும்.
    அந்நிய மண்ணில் நடைபெறும் போட்டிகளில் அதுபோன்ற ஆக்ரோஷமான ஆட்டம் அணிக்கு தேவையான ஒன்றாக இருக்கும். அணியின் நன்மைக்காக சதங்கள் அடிக்க விரும்புகிறேன். 100 ரன்களுக்குப் பிறகு ஒருமுகப்படுத்தும் தன்மை தவறும் பட்சத்தில் 2 விக்கெட்டுகள் எளிதாக விழுந்துவிடும்.
    களத்தில் நின்று அதன் அமைப்புக்கு பழகிவிட்ட ஒரு வீரர், புதிதாக களம் காணும் வீரரை காட்டிலும் எளிதாக ஷாட்கள் அடிக்கலாம். அதன்படியே நான் அடித்தாடுகிறேன். எனது உடற்தகுதியும் அதற்கு உதவியாக இருக்கிறது என்று கோலி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai