Enable Javscript for better performance
ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி. வெற்றி- Dinamani

சுடச்சுட

    
    austrilaya

    வெற்றிக்குப் பிறகு பெவிலியன் திரும்பும் பேங்கிராஃப்ட், வார்னர்.

    ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
    பிரிஸ்பேனில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 116.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்தது. ஜேம்ஸ் வின்ஸ் 83 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
    பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 130.3 ஓவர்களில் 328 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்தில் ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 26 ரன்கள் பின்தங்கிய இங்கிலாந்து, 2-ஆவது இன்னிங்ஸில் 71.4 ஓவர்களில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ஜோ ரூட் 51 ரன்கள் எடுத்தார். ஸ்டார்க், ஹேஸில்வுட், நாதன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
    பின்னர், 170 ரன்கள் இலக்குடன் திங்கள்கிழமை ஆடிய ஆஸ்திரேலியா, விக்கெட் இழப்பின்றி 50 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து வென்றது. பேன்கிராஃப்ட் 82, டேவிட் வார்னர் 87 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai