Enable Javscript for better performance
செய்திகள் சில வரிகளில்...- Dinamani

சுடச்சுட

    

    23 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பின்ஷிப் போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா, வினோத் குமார் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
    இந்தியா சர்வதேச சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் ஆடவர் பிரிவிலும், தனிஷ்க் மகளிர் பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
    இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, சர்வதேச ஹாக்கி சம்மேளனத் தலைவர் நரீந்தர் பத்ரா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
    இந்திய மகளிர் லீக் கால்பந்து போட்டியில், தமிழக அணியான சேது எஃப்சி தனது 2-ஆவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜம்மு காஷ்மீர் மாநில விளையாட்டு கவுன்சில் அணியை வீழ்த்தியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai