Enable Javscript for better performance
டென்னிஸ் தரவரிசை: சுமித் முன்னேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல், ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் 96 இடங்கள் முன்னேறி 225-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். தரவரிசையில் இது அவரது அதிகபட்சமாகும்.
    பெங்களூரு ஓபன் டென்னிஸ் போட்டியின் மூலம் தனது முதல் சேலஞ்சர் பட்டம் வென்றதை அடுத்து, அவர் இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார். யூகி பாம்ப்ரி, 2 இடங்கள் முன்னேறி 116-ஆவது இடத்தில் உள்ளார். அவர் இந்தியர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    இரட்டையர் பிரிவில், திவிஜ் சரண் முதல் முறையாக 47-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். இந்தப் பிரிவில் ரோஹன் போபண்ணா 18-ஆவது இடத்தில் தொடருகிறார்.
    மகளிர் ஒற்றையர் பிரிவில் அங்கிதா ரெய்னா 16 இடங்கள் முன்னேறி, 277-ஆவது இடத்தில் உள்ளார். கர்மான் கெளர் தன்டி 4 இடங்களை இழந்து 288-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai