Enable Javscript for better performance
ரஞ்சி கிரிக்கெட்: தமிழகத்துக்கு 233 ரன்கள் இலக்கு- Dinamani

சுடச்சுட

    

     

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பரோடாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகத்துக்கு 233 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட் செய்த பரோடா முதல் இன்னிங்ஸில் 98.1 ஓவர்களில் 309 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய தமிழகம் முதல் இன்னிங்ஸில் 95.3 ஓவர்களில் 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இதனால் முதல் இன்னிங்ஸில் 35 ரன்கள் முன்னிலை பெற்ற பரோடா, 2-ஆவது இன்னிங்ஸில் 57.5 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தற்போது தமிழகம் 2-ஆவது இன்னிங்ஸில் 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்களுடன் ஆடி வருகிறது. ஜெகதீசன், அபினவ் முகுந்த் தலா ஒரு ரன்னுடன் களத்தில் உள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai