Enable Javscript for better performance
ஸ்பானிஷ் ஓபன்: சத்தியனுக்கு தங்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்பெயினில் நடைபெற்ற ஸ்பானிஷ் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ஜி.சத்தியன் தங்கப் பதக்கம் வென்றார்.
    முன்னதாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் 9-ஆவது இடத்தில் இருந்த சத்தியன், போட்டித் தரவரிசையில் 11-ஆவது இடத்தில் இருந்த ஜப்பானின் கஸுஹிரோ யோஷிமுராவை 11-7, 3-11, 11-6, 6-11, 13-11, 11-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
    இது, சத்தியன் வெல்லும் 2-ஆவது முக்கியமான பட்டமாகும். முன்னதாக, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெல்ஜியம் ஓபனில் அவர் பட்டம் வென்றிருந்தார்.
    இதனிடையே, இப்போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனிகா பத்ரா-மெளமா தாஸ் ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது. இறுதிச்சுற்றில் அந்த ஜோடி, போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தென் கொரியாவின் ஜிஹீ ஜியோன்-ஹேன் யாங் ஜோடியிடம் 11-9, 6-11, 11-9, 9-11, 9-11 என்ற செட் கணக்கில் வீழ்ந்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai