Enable Javscript for better performance
உலகின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்: முரளிதரன் புகழாரம்- Dinamani

சுடச்சுட

    

    உலகின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்: முரளிதரன் புகழாரம்

    By DIN  |   Published on : 29th November 2017 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    muttiah

    'இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின், உலகின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்' என்று இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
    இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்டின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தில் 300-ஆவது விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றி, குறைந்த எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளில் (54) இத்தனை விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
    முன்னதாக, 1981-ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் டெனிஸ் லிலீ, 56 டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
    இந்நிலையில், 36 ஆண்டு சாதனையை அஸ்வின் முறியடித்தார். இந்தச் சாதனை புரிந்ததற்காக அவருக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
    இந்நிலையில், உலகின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முரளிதரன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    54 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்த அஸ்வினுக்கு வாழ்த்துக்கள். இது அவ்வளவு எளிதான காரியமல்ல. இன்றைய நிலையில், உலகின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் என்றால் அது மிகையல்ல.
    இந்திய அணியின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் இல்லை. எனினும், கூடிய விரைவில் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அஸ்வின் பங்கேற்று பல்வேறு சாதனைகளைப் புரிய வேண்டும் என்று விரும்புகிறேன்.
    அஸ்வினுக்கு தற்போது 31 வயதாகிறது. இன்னும் அவர் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புதிய சாதனைகளைப் படைக்கலாம். அதுவும், அவருக்கு காயம் எதுவும் ஏற்படாமல், சிறப்பாக பந்து வீசினால் மட்டுமே சாத்தியப்படும். 35 வயதைக் கடந்து விட்டால்
    சிறப்பான ஆட்டம் என்பது கொஞ்சம் சிரமம்தான் என்றார் அவர்.
    தொடர்ந்து ஓய்வின்றி போட்டிகளில் பங்கேற்ற நிலை இருப்பினும், தேவைப்படும்போது ஓய்வு கேட்டு பெறுவேன் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்:
    அதிக கிரிக்கெட் போட்டிகள் (இந்தியா-இலங்கை இடையே) நடைபெற்று வருகிறதா? என்பது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. ஒருவேளை அதிக வெற்றிகளை அணிக்கு கோலி தேடிக் கொடுத்து வருவதால், அவர் சோர்வடைந்து இருக்கலாம்.
    இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. அதற்கு அதிக மதிப்பெண்களை அளிப்பேன். அதேநேரம், இலங்கை அணியும் பலவீனமானதல்ல. ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். இருப்பினும், இலங்கை அணி வீரர்கள் அதிக அக்கறையுடன் இனி விளையாட வேண்டியது அவசியம்.
    நீங்கள் (இந்தியா) ஒரு சில போட்டிகளில்தான் தோல்வி அடைகிறீர்கள். ஆனால், இலங்கை அணி சமீப காலமாக அதிக போட்டிகளில் தோல்வியைச் சந்தித்து வருகிறது. இலங்கை அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லையோ எனத் எண்ணத் தோன்றுகிறது. அதுதான் எங்களுக்கு கவலை அளிக்கிறது என்றார் முரளிதரன்.
    முரளிதரன், 133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தவர் ஆவார். அதுமட்டுமல்லாமல், அதிவேகமாக, 400, 500, 600, 700, 800 விக்கெட்டுகளையும் கைப்பற்றியவர் என்ற சாதனையையும் அவர் தன்வசம் வைத்திருக்கிறார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai