Enable Javscript for better performance
ஐஎஸ்எல்: புணே-மும்பை இன்று மோதல்- Dinamani

சுடச்சுட

    
    isl

    இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் எஃப்சி புணே சிட்டி, மும்பை சிட்டி எஃப்சி அணிகள் இடையேயான ஆட்டம் புணேயில் புதன்கிழமை நடைபெறவுள்ளன.
    புணே அணி தனது முதல் ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் தில்லி டைனமோஸ் அணியிடம் வீழ்ந்தது. இதேபோல், பெங்களூரு எஃப்சி அணிக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை அணி தோல்வியைச் சந்தித்து.
    எனினும், இரண்டாவதாக அட்லெடிகோ டி கொல்கத்தா அணியை 1-4 என்ற கோல் கணக்கில் புணே வீழ்த்தி லீக் சுற்றில் முதல் வெற்றியை ருசித்தது.
    இதேபோல், பெங்களூரு அணி டெல்லி டைனமோஸை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
    இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் புதன்கிழமை மோத உள்ளன. விருவிருப்பாக நடைபெறவுள்ள இந்தப் போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
    புணே நகரில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளதால் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு புணே அணிக்கு கிடைக்கும். இதனால், அதிக உற்சாகத்துடன் அந்த அணி மும்பை அணியை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai