Enable Javscript for better performance
காமன்வெல்த் அட்டவணை வெளியீடு: ஹாக்கி தொடக்க ஆட்டத்தில் இந்தியா-பாக். மோதல்- Dinamani

சுடச்சுட

    

    காமன்வெல்த் அட்டவணை வெளியீடு: ஹாக்கி தொடக்க ஆட்டத்தில் இந்தியா-பாக். மோதல்

    By DIN  |   Published on : 29th November 2017 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    comman-wealth

    ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் அடுத்த ஆண்டு (2018) நடைபெறவுள்ள காமல்வெல்த் போட்டியில், ஹாக்கி ஆடவர் பிரிவில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
    கோல்ட் கோஸ்ட் நகரில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 4-ஆம்
    தேதி 21-ஆவது காமன்வெல்த் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.
    காமன்வெல்த் கூட்டமைப்பில் மொத்தம் 52 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பாட்மிண்டன், குத்துச் சண்டை, மல்யுத்தம், ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் காமன்வெல்த் விளையாட்டில் இடம்பெறும்.
    இந்நிலையில், இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ள ஹாக்கி அணிகள் தொடர்பாக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை அட்டவணை வெளியிட்டது.
    அதில், இடம்பெற்றுள்ள தகவல் விவரம் பின்வறுமாறு:
    ஆடவர் ஹாக்கி போட்டியின், 'ஏ' பிரிவில், காமன்வெல்த் போட்டியை நடத்தும் நாடான ஆஸ்திரேலியாவும், நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, கனடா, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளும், 'பி' பிரிவில், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மலேசியா, வேல்ஸ் ஆகிய நாடுகளும் பங்கேற்கின்றன.
    ஏப்ரல் 7-ஆம் தேதி, 'பி' பிரிவு முதல் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
    அதைத் தொடர்ந்து, வேல்ஸ் (ஏப்.8), மலேசியா (ஏப்.10), இங்கிலாந்து (ஏப்.11) ஆகிய அணிகளுடன் இந்திய ஆடவர் ஹாக்கி அணி மோதும்.
    மகளிர் ஹாக்கியில் பங்கேற்கும் நாடுகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில், இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மலேசியா, வேல்ஸ் நாடுகளும், 'பி' பிரிவில், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஸ்காட்லாந்து, கனடா, கானா ஆகிய நாடுகளும் உள்ளன.
    ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெறும் மகளிர் ஹாக்கி ஆட்டத்தில், 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, வேல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மலேசியா (ஏப்.6), இங்கிலாந்து (ஏப்.8), தென் ஆப்பிரிக்கா (ஏப்.10) ஆகிய அணிகளை இந்திய மகளிர் அணி அடுத்தடுத்து எதிர்கொள்ள உள்ளது.
    இதில், ஒவ்வொரு பிரிவிலும் இடம்பெற்றுள்ள ஓர் அணி, மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இறுதியில், ஒரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களுக்குள் வரும் அணிகள், அரையிறுதிக்கு முன்னேறும்.
    முதல் இரண்டு இடங்களுக்குள் இடம்பெறாத அணிகள் மூன்றாவது இடத்துக்கு விளையாடும்.
    மகளிர் ஹாக்கி அணிகளுக்கு ஏப்ரல் 12-ஆம் தேதியும், ஆடவர் ஹாக்கி அணிகளுக்கு ஏப்ரல் 13-ஆம் தேதியும் அரையிறுதி போட்டிகள் நடைபெறும். 
    ஆடவர், மகளிர் இறுதி போட்டிகள் ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஏப்ரல் 15-ஆம் தேதியுடன் காமன்வெல்த் போட்டிகள் நிறைவு பெறவுள்ளன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai