Enable Javscript for better performance
கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய உயர்வு: பேச்சுவார்த்தை நடத்த கோலி திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய உயர்வு: பேச்சுவார்த்தை நடத்த கோலி திட்டம்

    By DIN  |   Published on : 29th November 2017 10:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kholi

     

    இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் கவுன்சிலிடம் (பிசிசிஐ) கேப்டன் விராட் கோலி வலியுறுத்த இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அடுத்த ஆண்டு (2018) முதல் 2022-ஆம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதற்காக ஸ்டார் நெட்வொர்க் உடன் பிசிசிஐ ஓர் ஒப்பந்தம் இயற்றியுள்ளது.

    அதன்மூலம், பிசிசிஐ அதிக வருவாய் ஈட்டும் என்று தெரிகிறது.
    இந்நிலையில், கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் இந்திய அணி கிரிக்கெட் வீரர்களின் ஊதிய ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது.

    இந்நிலையில், பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராயை வரும் வெள்ளிக்கிழமை சந்தித்து, வீரர்களின் சம்பள உயர்வு குறித்து வலியுறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத பிசிசிஐ உயரதிகாரி ஒருவர், செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

    முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோருடன் வினோத் ராயைச் சந்தித்து வீரர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று கோலி கோரிக்கை முன்வைக்க உள்ளார்.
    சீனியர் வீரர்கள், வளர்ந்துவரும் வீரர்கள் என 3 வகையாகப் பிரித்து ஊதியம் அளிக்கப்பட்டு வருகிறது. கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் ஆண்டு வருவாய் அதிகம் ஈட்டிவரும் பட்டியலில் உள்ளனர்.

    பிசிசிஐ அமைப்பிடம் வெளிப்படையாக தங்களது கருத்துகளை வீரர்கள் தெரிவிக்கலாம். கோலி தலைமையிலான வீரர்களை வரவேற்கிறோம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai