Enable Javscript for better performance
ரஞ்சி கிரிக்கெட்: லீக் சுற்றுடன் வெளியேறியது தமிழகம்- Dinamani

சுடச்சுட

    

    ரஞ்சி கிரிக்கெட்: லீக் சுற்றுடன் வெளியேறியது தமிழகம்

    By DIN  |   Published on : 29th November 2017 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், தமிழக அணியை 102 ரன்கள் வித்தியாசத்தில் பரோடா அணி வீழ்த்தியது.
    இதனால், லீக் சுற்று ஆட்டத்துடன் தமிழகம் வெளியேறிவிட்டது. முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட் செய்த பரோடா முதல் இன்னிங்ஸில் 98.1 ஓவர்களில் 309 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய தமிழகம் முதல் இன்னிங்ஸில் 95.3 ஓவர்களில் 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
    இதனால் முதல் இன்னிங்ஸில் 35 ரன்கள் முன்னிலை பெற்ற பரோடா, 2-ஆவது இன்னிங்ஸில் 57.5 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
    இதையடுத்து, 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெகதீசன், அபினவ் முகுந்த் தலா ஒரு ரன்னுடன் திங்கள்கிழமை களத்தில் இருந்தனர்.
    செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஆட்டத்தில், மளமளவென விக்கெட் விழத் தொடங்கியது. பாபா அபராஜித் மட்டுமே நிலைத்து நின்று ஆடினார். அவரும் 60 ரன்கள் எடுத்திருந்தபோது, ஸ்வப்னில் சிங் பந்துவீச்சில் தீபக் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
    அடுத்து களம் இறங்கிய எம் முகமது டக் அவுட் ஆனார். இதன் பின்னர், வாஷிங்டன் சுந்தர் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க, யோ மகேஷ் 23 ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
    ஜெகதீஷன் கௌஷிங், ரவிஸ்ரீநிவாசன் ஆகியோரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, 102 ரன்கள் வித்தியாசத்தில் பரோடா வெற்றி பெற்றது.
    பரோடா தரப்பில், பந்துவீச்சாளர்கள் மெரிவலா, ஸ்வப்னில் சிங் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    'சி' பிரிவில் 6 ஆட்டங்களில் விளையாடிய தமிழகம் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. அந்தப் பிரிவில் 11 புள்ளிகள் மட்டுமே பெற்று லீக் சுற்றுடன் தமிழகம் வெளியேறியது.
    ம.பி. வெற்றி: இதனிடையே, சி பிரிவில் இடம்பெற்றுள்ள ஒடிஸா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மத்தியப் பிரதேசம் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
    குரூப் சி பிரிவில், மும்பை (21 புள்ளிகள்), மத்தியப் பிரதேசம் (21 புள்ளிகள்) எடுத்து காலிறுதிக்கு முன்னேறியது.
    இதற்கிடையே, குரூப் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள குஜராத், கேரள அணிகள் காலிறுதிக்கு முன்னேறியது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai