Enable Javscript for better performance
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டி: கோவா- பெங்களூரு இன்று மோதல்- Dinamani

சுடச்சுட

    

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டி: கோவா- பெங்களூரு இன்று மோதல்

    By DIN  |   Published on : 30th November 2017 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் 12-ஆவது லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா-பெங்களூரு எஃப்சி அணிகள் வியாழக்கிழமை மோதுகின்றன.
    இதில் கோவா அணியைப் பொருத்த வரையில், சென்னைக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் வெற்றி கண்டு, அடுத்த ஆட்டத்தில் மும்பையிடம் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், சொந்த மண்ணில் நடைபெறும் இந்த முதல் ஆட்டத்தில் வெற்றி பெற அந்த அணி மிகுந்த முனைப்புடன் உள்ளது.
    அதேவேளையில், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பெங்களூரை வீழ்த்துவது எளிதான செயல் அல்ல. முதல் ஆட்டத்தில் 2-0 என மும்பையை வீழ்த்திய பெங்களூரு, 2-ஆவது ஆட்டத்தில் 4-1 என டெல்லி டைனமோஸை திணறடித்துள்ளது. எனவே, இந்த ஆட்டம் விறு விறுப்பானதாக, ரசிகர்களுக்கு விருந்தளிக்கும்.
    இந்த ஆட்டம் குறித்து பெங்களூரு பயிற்சியாளர் செர்ஜியோ லோபெரா கூறியதாவது:
    இரு அணிகளும் எப்படி விளையாடும் என பரஸ்பரம் இரு தரப்புக்கும் தெரியும். எனினும், எங்களது திட்டங்களையும், ஆட்ட முறைகளையும் அப்படியே தவறாமல் செயல்படுத்துவதே முக்கியம் என நினைக்கிறேன். பலம் வாய்ந்த அணியான பெங்களூரு, தாங்கள் எத்தகைய ஃபார்மில் உள்ளனர் என்பதை காட்டியுள்ளனர். அவர்களுக்கு எதிரான எங்களது வியூகத்தை சரியாகப் பயன்படுத்தி வெல்வதே எங்களுக்கு முக்கியமான ஒன்று என்று செர்ஜியோ கூறினார்.
    இன்றைய ஆட்டம் 
    எஃப்சி கோவா-பெங்களூரு எஃப்சி
    நேரம்: இரவு 8 மணி
    இடம்: கோவா
    நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai