Enable Javscript for better performance
ஐஎஸ்எல்: மும்பையை வீழ்த்தியது புணே- Dinamani

சுடச்சுட

    
    isl

    புணேவில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதிய புணே-மும்பை அணி வீரர்கள்.

    இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டப் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில் எஃப்சி புணே சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சி அணியை வீழ்த்தியது.

    இரு அணிகளுக்கு இடையே புணேவில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணி 15-ஆவது நிமிடத்திலும், புணே அணி 74-ஆவது மற்றும் 90-ஆவது நிமிடத்திலும் கோல்கள் அடித்தன. இதில் மும்பை அணிக்கான கோலை பல்வந்த் சிங் அடிக்க, புணேவுக்கான கோல்களை அந்த அணியின் எமிலியானோ அல்ஃபாரோ அடித்தார்.
    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே மும்பை ஆதிக்கம் செலுத்தியது. 15 நிமிடத்தில் முன்னிலை பெற்ற அந்த அணியின் தடுப்பாட்டத்தை தகர்த்து முன்னேற புணே அணியால் இயலவில்லை. இருப்பினும், பின்பாதி ஆட்டத்தில் உத்வேகம் பெற்ற அந்த அணி தனது கோல் கணக்கை தொடங்கி ஆட்டத்தை சமன் செய்தது. இறுதி வரையில் இரு அணிகளுக்குமே 2-ஆவது கோல் வாய்ப்பு கிடைக்காத நிலையில், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் 2-ஆவது கோல் அடித்து 2-1 என்ற கணக்கில் வென்றது புணே.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai