Enable Javscript for better performance
ஐஓஏ அங்கீகாரம் பெற்றது பிஎஃப்ஐ- Dinamani

சுடச்சுட

    
    boxing

    இந்திய குத்துச்சண்டை சம்மேளனமானது (பிஎஃப்ஐ) இந்திய குத்துச்சண்டைக்கான தேசிய அமைப்பு என இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) புதன்கிழமை அங்கீகாரம் வழங்கியது.
    இதுகுறித்து பிஎஃப்ஐ தலைவர் அஜய் சிங் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறுகையில், 'சர்வதேச குத்தச்சண்டை சங்கத்தின் (ஏஐபிஏ) அங்கீகாரம் பெற்றால் மட்டுமே, பிஎஃப்ஐ-ஐ அங்கீகரிக்க இயலும் என்று ஐஓஏ கூறியிருந்தது. அதன்படி, ஏஐபிஏ உரிய அங்கீகாரம் வழங்கியதைத் தொடர்ந்து, ஐஓஏவும் தனது அங்கீகாரத்தை பிஐஎஃப்-க்கு வழங்கியுள்ளது' என்றார்.
    முன்னதாக, இந்திய அமெச்சூர் குத்துச்சண்டை சம்மேளனமானது (ஐஏபிஎஃப்), தேசிய குத்துச்சண்டை அமைப்பாக இருந்தது. இந்நிலையில், அதன் நிர்வாகிகளுக்கான தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, ஏஐபிஏ அதன் அங்கீகாரத்தை ரத்து செய்தது.
    இதையடுத்து ஏஐபிஏ மற்றும் இந்திய விளையாட்டு அமைச்சகத்தின் கண்காணிப்புடன் புதிதாக தேர்தல் நடத்தப்பட்டு, புதிதாக பிஎஃப்ஐ பொறுப்பேற்றது.
    இந்நிலையில், ஐஏபிஎஃப் தான் இந்தியாவின் அதிகாரப்பூர்வ குத்துச்சண்டை அமைப்பென ஐஓஏ குறிப்பிட்டு வந்தது. இதையடுத்து, ஐஏபிஎஃப்- ஆனது தன்னை இருப்பில் வைத்துக் கொள்ள முனைந்து கடந்த சில மாதங்களாக முந்தைய உறுப்பினர்கள் கொண்டு கூட்டங்களையும் நடத்தி வந்தது.
    இச்சூழ்நிலையில், தற்போது ஐஓஏவானது ஐஏபிஎஃப்-ஐ விடுத்து, பிஎஃப்ஐ-ஐ அதிகாரப்பூர்வமானதாக ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, தன்னை இருப்பில் வைத்துக் கொள்ளும் ஐஏபிஎஃப்-இன் முயற்சிகளானது முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது. முன்னதாக, இந்தியாவின் அதிகாரப்பூர்வ குத்துச்சண்டை அமைப்பு என ஐஏபிஎஃப் தன்னை அறிவித்துக் கொள்வதற்கு இந்திய விளையாட்டு அமைச்சகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai