Enable Javscript for better performance
கால்பந்து வீரர் வினீத்துக்கு கேரள அரசு பணி- Dinamani

சுடச்சுட

    
    veneth

    இந்திய கால்பந்து வீரர் சி.கே.வினீத்துக்கு கேரள அரசு பணி வழங்கியுள்ளது.
    விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் பொது நிர்வாகத் துறையில் உதவியாளராக, மாநில அரசின் தலைமைச் செயலகத்தில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான முடிவு கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தின்போது எடுக்கப்பட்டதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    முன்னதாக, மத்திய அரசு பணியில் இருந்த வினீத்துக்கு வருகைப் பதிவு போதிய அளவு இல்லாததை அடுத்து, அந்தப் பணியில் இருந்து அவர் நீக்கப்பட்டடார் என்பது குறிப்பிடத்தக்கது. முதன்மை கணக்கர் அலுவலகத்தில் தணிக்கையாளராக பணியாற்றி வந்த அவரை, கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி பணிநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    இதையடுத்து, பயிற்சி மற்றும் போட்டிகள் காரணமாகவே வினீத்துக்கு போதிய வருகைப் பதிவு இல்லை எனவும், அவரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளுமாறும் கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசிடம் வலியுறுத்தினார். எனினும், மத்திய விளையாட்டு அமைச்சகம் அதனை ஏற்கவில்லை. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai