சர்வதேச வீரராக நிலைக்க டெஸ்ட் கிரிக்கெட் முக்கியம்
By DIN | Published on : 30th November 2017 01:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோலிக்கு நினைவுப் பரிசு வழங்கும் பிஷன் சிங் பேடி.
சர்வதேச அளவில் சிறந்த வீரராக நிலைப்பதற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்படுவது முக்கியமான ஒன்று என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறினார்.
தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சந்திப்புக் கூட்டம் முதல் முறையாக, ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
தில்லி வீரரான விராட் கோலி இதில் கலந்துகொண்டு பேசியதாவது: சர்வதேச அளவில் சிறந்த வீரராக செயல்பட விரும்பினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக விளையாட வேண்டும் என்று நம்புகிறேன். எனவே, அதில் சிறப்பாக செயல்படுமாறு இளம் வீரர்களை கேட்டுக்கொள்கிறேன். 14 மற்றும் 16 வயதுக்கு உள்பட்டோருக்கான கிரிக்கெட்டில் நான் விளையாடியபோது பிஷன் சிங் பேடி பயிற்சியாளராக இருந்தார். அவர் எங்களை அதிகம் பயிற்சி பெறச் செய்வார். தற்போது அது எனது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தில்லி அணி கேப்டன்களுடன், அந்த அணியின் கேப்டனாக இருந்த நானும் சேர்ந்து நிற்பது எனக்கான கெளரவமாகும் என்று கோலி கூறினார்.
கோலி குறித்து பிஷன் சிங் பேடி கூறுகையில், 'சிறுவயதில் மைதானத்தில் கோலியின் சில நடவடிக்கைகளை நான் கண்டித்திருக்கிறேன். ஆனால், களத்தில் அவரை விட தீவிரமிக்க ஒரு இந்திய வீரரை நான் கண்டதில்லை' என்றார். இந்நிகழ்வின்போது, ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் உள்ள இரு கேலரிகளுக்கு முன்னாள் வீரர்களான பிஷன் சிங் பேடி, மொஹிந்தர் சிங் அமர்நாத் ஆகியோரது பெயர் சூட்டப்பட்டது.