Enable Javscript for better performance
பிசிசிஐ-க்கு ரூ.52 கோடி அபராதம்!- Dinamani

சுடச்சுட

    

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியை நடத்துவதில், போட்டி முறைகளுக்கு எதிரான வகையில் செயல்பட்டதாகக் கூறி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) ரூ.52.24 கோடியை இந்திய போட்டிகள் ஆணையம் (சிசிஐ) அபராதமாக விதித்துள்ளது.
    ஐபிஎல் போட்டியை போன்று வேறு லீக் போட்டிகளை நடத்தக் கூடாது என, அப்போட்டியை ஒளிபரப்பும் சேனல் கோரியதற்கு இணங்கியதாகக் கூறி பிசிசிஐக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு போட்டியாக, வேறு கிரிக்கெட் போட்டிகளை நடத்த பிசிசிஐ அனுமதி மறுக்கக் கூடாது எனவும் கூறியுள்ளது. முன்னதாக, சிசிஐ-ஆனது கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரியில் இதே குற்றச்சாட்டில், அதே தொகையை அபராதம் விதித்தது. எனினும், பிசிசிஐ மேல்முறையீடு செய்ததை அடுத்து, அந்த அபராத உத்தரவை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் 2015 பிப்ரவரியில் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
    இதையடுத்து இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரணை நடத்துமாறு சிசிஐ-ஆனது, தனது விசாரணை பிரிவுக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அறிக்கையானது 2016 மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது.
    இந்நிலையில், அந்த அறிக்கையின் முடிவுகள் மற்றும் பிசிசிஐயின் பதில்களை கருத்தில் கொண்டதை அடுத்து, தற்போது மீண்டும் இத்தகைய உத்தரவை சிசிஐ பிறப்பித்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai