Enable Javscript for better performance
மேம்பட்ட பயிற்சியாளர்கள் அவசியம்- Dinamani

சுடச்சுட

    
    vv-lakshman

    கிரிக்கெட்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது போல, தரமான பயிற்சியாளர்களை நியமிப்பதும் முக்கியம் என்று இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர் விவிஎஸ்.லஷ்மண் கூறினார்.
    இதுகுறித்து அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
    கபில் தேவை கண்டறிந்து, அவரை சிறந்த வீரராக உருவாக்கி ஹரியாணாவுக்காக ஆடச் செய்த தேஷ் பிரேம் ஆஸாதுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கவில்லை. சச்சின் டெண்டுல்கரை மேம்படுத்தியது அவரது பயிற்சியாளர் ரமாகந்த் ஆச்ரேகர் தானே தவிர, சிவாஜி பூங்கா மைதானம் அல்ல.
    என்னைப் பொருத்த வரையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, தரமான பயிற்சியாளர்களை ஏற்படுத்துவதிலும் கொடுக்க வேண்டும். இதை பிசிசிஐயிடமும் பரிந்துரைத்துள்ளோம்.
    சாதனை படைத்த வீரர்களிடம் கேட்டால், தங்களுக்கு தந்தை அல்லது சகோதரரைப் போன்ற பயிற்சியாளர் கிடைத்ததாக கூறுவார்கள். எனவே, சிறந்த வீரர்களை உருவாக்க, தரமான பயிற்சியாளர்கள் முக்கியமான தேவையாகும் என்று விவிஎஸ்.லஷ்மண் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai