Enable Javscript for better performance
சர்வதேச ஸ்குவாஷ்: காலிறுதியில் கோஷல்- Dinamani

சுடச்சுட

    

    பிரிட்டனில் நடைபெற்று வரும் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் செளரவ் கோஷல் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
    முன்னதாக, ஆடவர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருந்த எகிப்தின் முகமது அபோல்கரை எதிர்கொண்டார் கோஷல். இந்த ஆட்டத்தில் அவர் 11-9, 5-11, 8-11, 11-3, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
    இதையடுத்து கோஷல் தனது காலிறுதியில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் எகிப்தின் முகமது எல்ஷோர்பேகியை எதிர்கொள்கிறார்.
    ஜோஷ்னா, தீபிகா தோல்வி: இதனிடையே, அமெரிக்காவில் நடைபெற்று வரும் கரோல் வெய்முல்லர் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பலிக்கல் ஆகியோர் தங்களது முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai