Enable Javscript for better performance
முதல் டெஸ்ட்: மே.இ.தீவுகள் - 219- Dinamani

சுடச்சுட

    

    ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் தனது முதல் இன்னிங்ஸில் 82.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்துள்ளது.
    டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் தொடக்க வீரர் பிரத்வெயிட் 3 ரன்களில் ஆட்டமிழக்க, உடன் வந்த கிரன் பாவெல் சற்று நிலைத்தார். அடுத்து வந்த கைல் ஹோப் 16 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இந்நிலையில், அரைசதம் கடந்த கிரன் பாவெல் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    பின்னர் வந்த ஷாய் ஹோப் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுமுனையில் ரோஸ்டன் சேஸ் 31 ரன்களிலும், ஷேன் டெளரிச் 11 ரன்களிலும் வீழ்ந்தனர். பிளாக்வுட் 1, கேப்டன் ஜேசன் ஹோல்டர் 8 ரன்னில் நடையைக் கட்ட, தேவேந்திர பிஷு, கெமர் ரோச், ஷானன் கேப்ரியேல் டக் அவுட் ஆகினர்.
    இவ்வாறாக மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 82.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. ஷாய் ஹோப் 201 பந்துகளில் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜிம்பாப்வே தரப்பில் கிரேமி கிரீமர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சீன் வில்லியம்ஸ் 3, கைல் ஜார்விஸ், சாலமன் மிரே, சிகந்தர் ராஸா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
    ஜிம்பாப்வே-19: இதையடுத்து தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய ஜிம்பாப்வே முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தது. மஸாகட்சா ரன்கள் இன்றியும், சாலமன் மிரே 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai