தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி மறைவையொட்டி டிஎன்பிஎல் ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்-சங்கர் சிமெண்ட் சார்பில் டிஎன்பிஎல் ஆட்டங்கள் திருநெல்வேரி, திண்டுக்கல்லில் நடந்து வருகின்றன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பேந்தர்ஸ் அணிகள் இடையிலான குவாலிபையர் 1 ஆட்டம் நடப்பதாக இருந்தது.
ஆனால் மாலையில் கருணாநிதி மறைந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து செவ்வாய்க்கிழமை இரவு நடப்பதாக இருந்த குவாலிபையர் 1 ஆட்டம் ஒரு பந்து கூட வீசாத நிலையில் ஒத்தி வைக்கப்பட்டது.
அதே போல் புதன்கிழமை நடைபெறுவதாக இருந்த கோவை-காரைக்குடி அணிகள் இடையிலான எலிமினேட்டர் ஆட்டமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என டிஎன்பிஎல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.