வரும் 2020 ஆண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக முகத்தின் மூலம் ஒருவரை அடையாளம் காணும் முறை பின்பற்றப்பட உள்ளது.
டோக்கியோவில் பல்வேறு மைதானங்களில் போட்டிகள் நடக்கவுள்ளன.
இந்நிலையில் அமைப்பாளர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நியோபேஸ் தொழில்நுட்பம் மூலம் முகத்தை அடையாளம் காணும் முறை பயன்படுத்தப்படுகிறது.
போட்டியில் பங்கேற்க வரும் அங்கீகாரம் பெற்ற வீரர்கள், நிர்வாகிகள், அலுவலர்களை இதன் மூலம் எளிதாக அடையாளம் காணலாம்.
மேலும் இதனால் நெரிசல், காலவிரயம் தவிர்க்கப்படும்.
பாதுகாப்பு இயக்குநர் சுயோஷி வாஷிட்டா கூறுகையில், முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதின் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளை துல்லியமாக செய்ய முடியும்.
எக்ஸ் ரே மற்றும் ஆள்களை வைத்து சோதனை செய்வதைக் காட்டிலும் இது சிறப்பானது.
ஒவ்வொரு அங்கீகாரம் பெற்ற நபரின் முக அடையாளங்களை பெற்று பதிவு செய்து தனியாக தொகுப்பில் வைக்கலாம். இவற்றை சேகரித்து பல்வேறு இடங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.