ரஞ்சி கோப்பை போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் அறிமுகம்: பிசிசிஐ தொழில்நுட்பக் குழு முடிவு

ரஞ்சி கோப்பை போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்களை அறிமுகம் செய்வது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தொழில்நுட்பக் குழு முடிவு செய்துள்ளது.

ரஞ்சி கோப்பை போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்களை அறிமுகம் செய்வது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தொழில்நுட்பக் குழு முடிவு செய்துள்ளது.
கொல்கத்தாவில் அக்குழுவின் கூட்டம் திங்கள்கிழமை இரண்டரை மணி நேரம் நடைபெற்றது. 2018-19-ம் ஆண்டு உள்ளூர் சீஸனை விஜய் தேசிய ஒருநாள் சாம்பியன் போட்டியான விஜய் ஹசாரே கோப்பை ஆட்டங்களுடன் தொடங்க வேண்டும். ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும். மும்பையில் நடைபெற்ற அணி கேப்டன்கள்-பயிற்சியாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் பெரும்பாலானோர் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. தற்போது 4 பிரிவுகளில் இருந்து 2 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறுகின்றன.
நாக் அவுட் ஆட்டங்கள் காலிறுதிக்கு முன்னரே தொடங்க வேண்டும் என கேப்டன்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் கூடுதலாக 8 ஆட்டங்கள் இடம்பெறும். 16 அணிகளுக்கும் கூடுதலாக ஒரு ஆட்டம் நடைபெறும்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட மேற்கு இந்திய பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளதால், விஜய் ஹசாரே போட்டியுடன் உள்ளூர் சீஸனை தொடங்க வேண்டும். பின்னர் ரஞ்சி கோப்பை ஆட்டங்கள் நடைபெறும். அதன் பின்னர் தேசிய டி 20 போட்டிகள் சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டி நடைபெறும். இதன் மூலம் ஐபிஎல் அணிகள் திறமையான வீரர்களை கண்டறிய முடியும். 
இதுதொடர்பாக பிசிசிஐ தற்காலிக செயலாளர் அமிதாப் செளத்ரி கூறியது: எஸ்ஜி பந்துகளுக்கு பதிலாக கூக்கப்புரா பந்துகளை பயன்படுத்த குழு பரிந்துரைத்துள்ளது. துலீப் கோப்பை இரவு, பகல் ஆட்டங்களாக பிங்க் நிற பந்துகளுடன் விளையாடப்படும். புதிய விளையாட்டு மைதானங்களை அடையாளம் காண முடிவு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் கிரிக்கெட் போட்டிகளை மேலும் பிரபலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு நாள் மற்றும் டி 20 மகளிர் போட்டிகளில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com