அடிலெய்ட் டெஸ்ட்: மீண்டும் ஏமாற்றிய இந்திய பேட்ஸ்மேன்கள்! நம்பிக்கையளிக்கும் புஜாரா!

தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது...
அடிலெய்ட் டெஸ்ட்: மீண்டும் ஏமாற்றிய இந்திய பேட்ஸ்மேன்கள்! நம்பிக்கையளிக்கும் புஜாரா!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடர் அடிலெய்டில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெற்றுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில், இங்கிலாந்தில் சொதப்பியதுபோல இன்றும் இந்திய பேட்ஸ்மேன்கள் இந்திய ரசிகர்களை தங்களுடைய மோசமான பேட்டிங்கினால் ஏமாற்றினார்கள். மிகவும் எதிர்பார்த்த விராட் கோலி, கவாஜாவின் அற்புதமான கேட்சினால் 3 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். ராகுல் 2, விஜய் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். ரஹானேவும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா, 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 37 ரன்களில் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைப் போல அதிரடியாக விளையாட முயன்ற ரிஷப் பந்த், 38 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். நிதானமாகவும் பக்குவமாகவும் விளையாடிய ஒரே வீரரான புஜாரா, 100 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்டு இந்திய அணிக்கு நம்பிக்கையூட்டி வருகிறார். ஒருகட்டத்தில் 30 பந்துகளுக்கு மேல் அவரால் ஒரு ரன்னும் எடுக்கமுடியவில்லை. ஆனால் பதற்றம் அடையாமல் அணியின் நிலைமையைக் கருத்தில்கொண்டு பேட்டிங் செய்தார். புஜாராவின் முயற்சியினால் இந்திய அணி எப்படியும் 200 ரன்களைத் தாண்டிவிடும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 

தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. புஜாரா 46, அஸ்வின் 5 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ஆஸ்திரேலியத் தரப்பில் லயன், ஹேஸில்வுட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com