காயத்திலிருந்து மீண்டு வரும் பிருத்வி ஷா, 2-வது டெஸ்டில் விளையாடுவாரா?: ரவி சாஸ்திரி பதில்!

ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு விதமாகக் காயத்திலிருந்து மீண்டுவருவார்கள். இள வயது என்பதால்
காயத்திலிருந்து மீண்டு வரும் பிருத்வி ஷா, 2-வது டெஸ்டில் விளையாடுவாரா?: ரவி சாஸ்திரி பதில்!

ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கேட்ச் பிடிக்க முயன்றபோது இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பிருத்வி ஷாவைத் தூக்கிக்கொண்டு ஓய்வறைக்கு அழைத்துச் சென்றார்கள். பிறகு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஸ்கேன் செய்துபார்த்தபோது தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பிருத்வி ஷா முதல் டெஸ்டில் விளையாடமாட்டார் என பிசிசிஐ அறிவித்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தொடக்க வீரர்களாக முரளி விஜய்யும் கேஎல் ராகுலும் களமிறங்கினார்கள். 

இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டு வரும் 19 வயது பிருத்வி ஷா, டெஸ்ட் தொடரில் எப்போது விளையாட ஆரம்பிப்பார் என்கிற கேள்விக்கு இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதில் அளித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் சென் ரேடியாவுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

காயத்தினால் பிருத்வி ஷா விளையாட முடியாமல் போனது துரதிர்ஷ்டமான விஷயம். அவர் இங்கு விளையாடுவது குறித்து நாங்கள் மிகவும் ஆர்வமாக இருந்தோம். படிப்படியாக முன்னேறி இந்திய அணியில் 18 வயது வீரர் இடம்பிடிக்கும்போது அப்படித்தானே இருக்கும்! எனினும் அவர் தற்போது நன்றாக மீண்டு வருகிறார். நடக்க ஆரம்பித்துள்ளார். இந்த வார இறுதியில் அவரை ஓடவைத்து விட்டால், அது நல்ல அறிகுறியாக இருக்கும். 

மெல்போர்னில் நடைபெறும் 3-வது டெஸ்டில் அவர் இடம்பிடிப்பார் என நினைக்கிறேன். ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு விதமாகக் காயத்திலிருந்து மீண்டுவருவார்கள். இள வயது என்பதால் விரைவில் தேறிவந்துவிட வாய்ப்புண்டு. டிசம்பர் 14 அன்று தொடங்கவுள்ளது 2-வது டெஸ்ட். அதற்கு முன்பு அவர் விளையாடுவது குறித்து ஒரு முடிவு எடுப்போம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com