துளிகள்...

துளிகள்...

 இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் இரவு விடுதி சர்ச்சை விவகாரத்திலிருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தாலும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரிடம் அதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.


 2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தனது வீரர்கள் பங்கேற்பதற்காக மான்செஸ்டர் சிட்டி கால்பந்து கிளப் அணியானது, ஃபிஃபாவிடம் இருந்து சுமார் ரூ.35 கோடியை பெற்றுள்ளது. இதர கிளப்புகள் பெற்றதுடன் ஒப்பிடுகையில் இதுவே அதிகமாகும்.


 புரோ கபடி லீக் கால்பந்து போட்டியின் 96-ஆவது ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணி 35-33 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை த்ரில் வெற்றி கண்டது.


 ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டிலிருந்து தற்போது ஓய்வு பெறப்போவதில்லை என்று கூறியுள்ள தினேஷ் கார்த்திக், தமிழ்நாடு அணிக்காக கோப்பையை வெல்வதே தனது லட்சியம் என்று கூறியுள்ளார்.


 செளராஷ்டிர கிரிக்கெட் வீரர் ஜெயதேவ் ஷா, விரைவில் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com