புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக உமேஷ் யாதவைத் தேர்வு செய்தது ஏன்?: விராட் கோலி விளக்கம்

2-வது டெஸ்டுக்கு புவனேஸ்வர் குமாரைத் தேர்வு செய்யாதது ஏன் என்கிற கேள்விக்குச் செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி கூறியதாவது...
புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக உமேஷ் யாதவைத் தேர்வு செய்தது ஏன்?: விராட் கோலி விளக்கம்

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டை 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. 

5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்களுடன் தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியத் தரப்பில் ஸ்டார்க், லயன் தலா 3 விக்கெட்டுகளையும் ஹேஸில்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். லயனுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. இதையடுத்து 4 டெஸ்டுகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட், மெல்போர்னில் 26 அன்று தொடங்கவுள்ளது.

2-வது டெஸ்டுக்கு புவனேஸ்வர் குமாரைத் தேர்வு செய்யாதது ஏன் என்கிற கேள்விக்குச் செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி கூறியதாவது:

சமீபகாலமாக புவனேஸ்வர் குமார் டெஸ்ட் போட்டிகளில் அவ்வளவாக விளையாடியதில்லை. உமேஷ் யாதவ் விளையாடிய கடைசி டெஸ்டில் 10 விக்கெட்டுகள் எடுத்தார். எனவே அவரைத் தேர்வு செய்தோம். நல்ல உடற்தகுதியில் இருந்திருந்தால் அஸ்வினை நாங்கள் தேர்வு செய்திருக்கக்கூடும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com