ஐபிஎல் ஏலம்: நேரலைப் பதிவுகள்!

தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை ரூ. 8.40 கோடிக்கு பஞ்சாப் அணி தேர்வு செய்துள்ளது...
ஐபிஎல் ஏலம்: நேரலைப் பதிவுகள்!

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல் 2019) கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில்  இன்று நடைபெற்று வருகிறது.

கடந்த 2008 ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் உலகம் முழுவதும் பரவலாக வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இந்திய வீரர்கள், உள்பட பல்வேறு பிரபல வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். அதிக வருவாய் ஈட்டித் தரும் விளையாட்டுகளில் ஒன்றாக ஐபிஎல் உள்ளதால், இதற்கான ஏலத்தில் வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.

*****

* தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை ரூ. 8.40 கோடிக்கு பஞ்சாப் அணி தேர்வு செய்துள்ளது.
* மும்பை ஆல்ரவுண்டரான ஷிவம் டுபே ரூ. 5 கோடிக்கு ஆர்சிபி அணிக்குத் தேர்வாகியுள்ளார்.
*சர்ஃபராஸ் கானை பஞ்சாப் அணி ரூ. 25 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது. 
* பஞ்சாப் வீரர் அன்மோல்ப்ரீதி சிங்கை ரூ. 80 லட்சத்துக்கு மும்பை தேர்வு செய்துள்ளது. 
* கர்நாடக வீரர் தேவ்தத்தை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது பெங்களூர் அணி.

* மோஹித் சர்மாவைத் தேர்வு செய்யவும் அணிகள் போட்டியிட்டன. மும்பையுடன் கடுமையாகப் போட்டியிட்டு ரூ. 5 கோடிக்குத் தேர்வு செய்தது சென்னை அணி. இந்த ஏலத்தில் சென்னை அணி தேர்வு செய்த முதல் வீரர்.

* ராகுல் சர்மா, ஆடம் ஸம்பா, காரி பியர், ஃபவத் அஹமது ஆகிய வீரர்களை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. 
* வருண் ஆரோனைக் கடந்த வருடம் எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. இந்தமுறை அவரை ராஜஸ்தான் அணி ரூ. 2.40 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.
* முகமது ஷமியைத் தேர்வு செய்ய சென்னை அணி மிகவும் ஆர்வம் காண்பித்தது. ஆனால் ஒருகட்டத்தில் பின்வாங்கியது. இதனால் பஞ்சாப் அணி அவரை ரூ. 4.80 கோடிக்குத் தேர்வு செய்தது.
* இஷாந்த் சர்மாவை ரூ. 1 கோடிக்கு தில்லி அணி தேர்வு செய்துள்ளது. மலிங்காவை மும்பை அணி ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது. 
* வேகப்பந்துவீச்சாளர்களுக்கான ஏலம் தொடங்கியுள்ளது. கடந்த வருடம் ரூ. 11.50 கோடிக்குத் தேர்வான உனாட்கட்டை இந்தமுறை ராஜஸ்தான் அணி ரூ. 8.40 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது. உனாட்கட்டைத் தேர்வு செய்ய சென்னை அணி ரூ. 5.80 கோடி வரை முயன்றது.

 
* காயம் காரணமாகச் சமீபகாலமாக சர்வதேச ஆட்டங்களில் விளையாடாமல் இருக்கும் சாஹாவை ஹைதராபாத் அணி ரூ. 1.20 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது. கடந்த வருடம் விளையாடிய அணிக்கே சாஹா மீண்டும் திரும்பியுள்ளார்.



* அடுத்ததாக விக்கெட் கீப்பர்களுக்கான ஏலம் தொடங்கியது. முதலில் நமன் ஓஜாவின் பெயர் அறிவிக்கப்பட்டது. யாரும் தேர்வு செய்யவில்லை. பென் மெக்டர்மாடையும் யாரும் தேர்வு செய்யவில்லை. இங்கிலாந்தின் பேர்ஸ்டோவை ரூ. 2.20 கோடிக்குத் தேர்வு செய்தது ஹைதராபாத் அணி. விக்கெட் கீப்பர் இல்லாததால் இவரைத் தேர்வு செய்ய ஹைதராபாத் அணி மிகவும் ஆர்வம் செலுத்தியது. மேற்கிந்தியத் தீவுகளின் நிகோலஸ் பூரானை பஞ்சாப் அணி ரூ. 4.20 கோடிக்குத் தேர்வு செய்தது. 

* இந்திய ஆல்ரவுண்டர் அக்‌ஷர் படேலை தில்லி அணி ரூ. 5 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது. 

* இந்திய ஆல்ரவுண்டர்களான யுவ்ராஜ் சிங், குர்கீரத் சிங் ஆகியோரை யாரும் தேர்வு செய்யவில்லை. யுவ்ராஜை சென்னை அணி தேர்வு செய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த அணியும் யுவ்ராஜின் தேர்வுக்கு ஆர்வம் செலுத்தவில்லை.  ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான ஹெண்ரிகஸை பஞ்சாப் அணி ரூ. 1 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.

* இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜார்டனை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை.

* கடந்தமுறை ஹைதராபாத் அணியில் விளையாடிய மே.இ. வீரர் கார்லஸ் பிராத்வெயிட்டைத் தேர்வு செய்ய பஞ்சாப் அணியும் கொல்கத்தா அணியும் கடுமையாகப் போட்டியிட்டன. இறுதியில் கொல்கத்தா அணி  ரூ. 5 கோடிக்குத் தேர்வு செய்தது.
 
* ஆல்ரவுண்டர்களுக்கான ஏலத்தில் கிறிஸ் வோக்ஸை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை.

* நியூஸிலாந்தின் மார்டின் கப்திலையும் எந்த அணியும் தேர்வு செய்யவில்லை.

* ஐபிஎல்-லின் முதல் ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய பிரண்டம் மெக்கலமை இந்தமுறை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை.

*மேற்கிந்திய வீரர் ஹெட்மெயரை ஆர்சிபி (பெங்களூரு) அணி தேர்வு செய்துள்ளது, ரூ. 4.20 கோடிக்கு.

* இந்திய டெஸ்ட் வீரர் ஹனுமா விஹாரியைத் தேர்வு செய்ய அணிகளுக்கு இடையே பலத்த போட்டி நடைபெற்றது. தில்லி அணி விஹாரியை ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்தது.     

மனோஜ் திவாரியின் பெயர் முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. அடிப்படை விலை ரூ. 50 லட்சம் என்றபோதும் எந்த அணியும் அவருடைய தேர்வில் ஆர்வம் செலுத்தவில்லை. அடுத்ததாக அறிவிக்கப்பட்ட புஜாராவையும் எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. அலெக்ஸ் ஹேல்ஸுக்கும் இதே நிலைமையே ஏற்பட்டது. 

இந்த வருட ஐபிஎல் ஏலத்தை  ஹுயூக் எட்மியாடஸ் முதல்முறையாகத் தொகுத்து வழங்குகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com