ஐபிஎல் ஏலம்: அடிப்படைத் தொகையிலிருந்து அதிகச் சம்பளம் பெற்ற வீரர்கள் யார் யார்?

இந்தியன் ப்ரீமியர் லீக் ஐபிஎல் 2019 சீசனுக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது...
ஐபிஎல் ஏலம்: அடிப்படைத் தொகையிலிருந்து அதிகச் சம்பளம் பெற்ற வீரர்கள் யார் யார்?

இந்தியன் ப்ரீமியர் லீக் ஐபிஎல் 2019 சீசனுக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. ஐபிஎல் 12- வரும் மார்ச் முதல் மே மாதம் வரை நடக்கிறது. 8 அணிகள் சார்பில் வீரர்களுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. ஏலத்தில் மொத்தம் 351 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 228 இந்திய வீரர்கள், 123 வீரர்கள் வெளிநாட்டினர் ஆவர். காலியாக உள்ள 70 இடங்களுக்கு மட்டுமே ஏலம் நடைபெற்றது. இதில் 50 இந்திய வீரர்கள், 20 வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்க 8 அணிகள் போட்டி போட்டன. 

அடிப்படை விலையிலிருந்து அதிகச் சம்பளம் பெற்ற வீரர்கள் இவர்கள்தான் 

ரூ. 20 லட்சம் அடிப்படை விலையிலிருந்து ரூ. 8.40 கோடி பெறவுள்ள தமிழக வீரர் வருண் சக்கரவத்தி இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

42 மடங்கு - வருண் சக்கரவர்த்தி ( ரூ. 20 லட்சம் முதல் ரூ. 8.40 கோடி) 
25 மடங்கு - ஷிவம் டுபே (ரூ. 20 லட்சம் முதல் ரூ. 5 கோடி) 
24 மடங்கு - பிரப்சிம்ரன் சிங் (ரூ. 20 லட்சம் முதல் ரூ. 4.80 கோடி) 
18 மடங்கு - அக்‌ஷ்தீப் நாத் (ரூ. 20 லட்சம் முதல் ரூ. 3.60 கோடி) 
10 மடங்கு - மோஹித் சர்மா (ரூ. 50 லட்சம் முதல் ரூ. 5 கோடி) 

ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வானவர்கள்

ரூ. 8.40 கோடி - ஜெயதேவ் உனாட்கட் (ராஜஸ்தான்)
ரூ. 8.40 கோடி - வருண் சக்கரவர்த்தி (பஞ்சாப்)
ரூ. 7.20 கோடி - சாம் கரண் (பஞ்சாப்)
ரூ. 6.40 கோடி - காலின் இங்க்ரம் (தில்லி)
ரூ. 5 கோடி - கார்லஸ் பிராத்வைட் (கொல்கத்தா), அக்‌ஷர் படேல் (தில்லி), மோஹித் சர்மா (சென்னை), ஷிவம் டுபே (பெங்களூர்)

ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்திலும் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர்கள்

2008 - தோனி
2009 - பிளிண்டாப்/பீட்டர்சன்
2010- பாண்ட்/பொலார்ட்
2011 - கம்பீர்
2012 - ஜடேஜா
2013 - மேக்ஸ்வெல்
2014 - யுவ்ராஜ் சிங்
2015 - யுவ்ராஜ் சிங்
2016 - வாட்சன்
2017 - ஸ்டோக்ஸ்
2018 - ஸ்டோக்ஸ்
2019 - உனாட்கட்/வருண் சக்கரவர்த்தி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com