எப்படியிருந்த யுவ்ராஜ் சிங்.... ஒவ்வொரு ஏலத்திலும் படிப்படியாக மதிப்பு குறைந்த கதை!

ஏலத்தில் யுவ்ராஜை ஒருமுறை தேர்வு செய்கிற அணி அடுத்தமுறை தேர்வு செய்வதில்லை...
எப்படியிருந்த யுவ்ராஜ் சிங்.... ஒவ்வொரு ஏலத்திலும் படிப்படியாக மதிப்பு குறைந்த கதை!

2014 மற்றும் 2015 ஏலங்களில் அதிக விலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யுவ்ராஜ் சிங். இந்த வருடம் அனைவரும் அவரை வினோதமாகப் பார்க்கும் அளவுக்கு அவருடைய நிலை மாறிவிட்டது.

2014-ம் வருடம் ரூ. 14 கோடிக்கும் அடுத்த வருடம் ரூ. 16 கோடிக்கும் தேர்வான யுவ்ராஜ் சிங் இந்த வருடம் ரூ. 1 கோடிக்கு மட்டுமே மும்பை அணிக்குத் தேர்வாகியுள்ளார்.

யுவ்ராஜின் சமீபத்தில் ஏலத் தொகை

2008- ஐகான் வீரர் (பஞ்சாப்)
2011 - 1.8 மில்லியன் டாலர் (புணே)
2014 - ரூ. 14 கோடி (பெங்களூர்)
2015 - ரூ. 16 கோடி (தில்லி)
2016 - ரூ. 7 கோடி (ஹைதராபாத்)
2018 - ரூ. 2 கோடி (பஞ்சாப்)
2019 - ரூ. 1 கோடி. 

கடந்த ஐபிஎல் போட்டியில் 8 ஆட்டங்களில் விளையாடிய யுவ்ராஜ் சிங், மொத்தமாக 65 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை. 6 ஆட்டங்களுக்குத் தேர்வாகவில்லை. ரஞ்சி போட்டியில் 3 ஆட்டங்களில் விளையாடி 78 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். விஜய் ஹசாரே போட்டியில் 7 ஆட்டங்களில் 264 ரன்கள் எடுத்தார். 

இதனால்தான் எந்த அணியும் யுவ்ராஜைத் தேர்வு செய்ய முதலில் ஆர்வம் செலுத்தவில்லை. மீண்டும் ஏலத்தில் அவர் பெயர் அறிவிக்கப்பட்டபோது அடிப்படைத் தொகையான ரூ. 1 கோடிக்குத் தேர்வு செய்தது மும்பை. 

ஐபிஎல் ஏலத்தில் ஆறு முறை பங்கேற்ற யுவ்ராஜ் சிங்கை ஒவ்வொரு முறையும் வெவ்வேறு அணிகள் தேர்வு செய்துள்ளன. அதாவது ஏலத்தில் யுவ்ராஜை ஒருமுறை தேர்வு செய்கிற அணி அடுத்தமுறை தேர்வு செய்வதில்லை. இதனால் ஐபிஎல் ஏலங்களில் ஆறு வெவ்வேறு அணிகள் தேர்வு செய்த ஒரே வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் யுவ்ராஜ் சிங். 

இந்த வருடமாவது சிறப்பாக விளையாடி அடுத்த ஏலத்தில் தன் மதிப்பை உயர்த்துவாரா யுவி?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com