கோலி, சாஸ்திரி பங்களிப்பை ஆய்வு செய்ய வேண்டும்

ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் தொடருக்கு பின் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் பங்களிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார்.
கோலி, சாஸ்திரி பங்களிப்பை ஆய்வு செய்ய வேண்டும்

ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் தொடருக்கு பின் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் பங்களிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார்.
பெர்த் டெஸ்ட்டில் இந்தியா 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதற்கு சுழற்பந்து வீச்சாளரை சேர்க்காததே காரணம் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. அணி நிர்வாகம் வீரர்களை தேர்வு செய்வது குறித்து கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற தொடரில் இருந்து வீரர்கள் தேர்வில் தொடர்ந்து தவறுகள் புரிகின்றனர். இதனால் அணிக்கு தான் பாதிப்பு ஏற்படுகிறது.
அணியில் செயல்பாட்டில் உள்ள ஓட்டைகளை அடைக்கும் வழிமுறைகளை நிர்வாகம் அறிய வேண்டும். ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸி. அணியை வெல்ல முடியவில்லை என்றால் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். பெரிய குழுவை ஏன் தேர்வு செய்ய வேண்டும். தேர்வுக் குழு தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை.
பணக்கார அமைப்பான பிசிசிஐயால் 40 பேர் கொண்ட அணியை கூட அனுப்ப முடியும். ஏராளமான வீரர்கள் மீண்டும் வந்து உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும். முதலில் திருப்பி அனுப்பப்பட வேண்டிய வீரர் கேஎல். ராகுல் தான். மீதமுள்ள 2 டெஸ்ட் ஆட்டங்களில் அவர் ஆடக்கூடாது. ரஞ்சி கோப்பைக்கான கர்நாடக அணியில் வந்து ஆட வேண்டும். 
டெஸ்ட் தொடர் முடிவுற்றதும் கோலி, சாஸ்திரி பங்களிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றார் கவாஸ்கர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com