மான்செஸ்டர் யுனைடெட் அணி பயிற்சியாளர் மௌரின்ஹோ நீக்கம்

தொடர் தோல்விகள் எதிரொலியாக மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜோஸ் மெளரின்ஹோ நீக்கப்பட்டுள்ளார்.
மான்செஸ்டர் யுனைடெட் அணி பயிற்சியாளர் மௌரின்ஹோ நீக்கம்


தொடர் தோல்விகள் எதிரொலியாக மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜோஸ் மெளரின்ஹோ நீக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டியின் கிளப் அணிகளில் முக்கியமானதாக உள்ளது மான்செஸ்டர் யுனைடெட் அணியாகும்.
போர்ச்சுகல் நாட்டின் கால்பந்து வீரரான மெளரின்ஹோ இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
நடப்பு சீசனில் அவரது தலைமையின் கீழ் அந்த அணி சரியாக விளையாடவில்லை. நடப்பு ப்ரீமியர் லீக் சீசனில் 17 ஆட்டங்களில் வெறும் 26 புள்ளிகளுடன் யுனைடெட் அணி 6-ஆவது இடத்தில் உள்ளது. கடைசியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் லிவர்பூல் அணியிடம் 3-1 என கிடைத்த தோல்வி மெளரின்ஹோவின் நீக்கத்தை உறுதி செய்து விட்டது.
இரண்டு முழு சீசன்களில் ஜோஸ் மெளரின்ஹோ பயிற்சியில் யுனைடெட் அணி ஐரோப்பா கோப்பா, லீக் கோப்பை பட்டங்களை பெற்றுத் தந்தார். மேலும் கடந்த சீசனில் இரண்டாம் இடத்தையும், எஃப் ஏ கோப்பை போட்டியிலும் மான்செஸ்டர் யுனைடெட் அணி இரண்டாம் இடம் பெற்றது.
தொடர் தோல்விகள் எதிரொலியாக மெளரின்ஹோ நீக்கப்பட்டார். ஏற்கெனவே செல்ஸி அணியின் பயிற்சியாளராக இருந்த போது மௌரின்ஹோ இடையிலேயே நீக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com