பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் எடுக்கவேண்டும்: பந்துவீச்சாளர்களின் நிலைமை குறித்து விராட் கோலி

பேட்டிங் குழுவாக இன்னும் அதிக ரன்களை நாங்கள் எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் தற்போது நாங்கள் எடுக்கும் ஸ்கோர்களுக்கு...
பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் எடுக்கவேண்டும்: பந்துவீச்சாளர்களின் நிலைமை குறித்து விராட் கோலி

டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய பேட்ஸ்மேன்கள் கூடுதல் ரன்களைச் சேர்க்கவேண்டும் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது.  அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது.  இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டை 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளைப் பாதுகாக்கவேண்டும். பந்துவீச்சாளர்கள் எப்படி தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்று பார்த்து வருகிறோம். பேட்டிங் குழுவாக இன்னும் அதிக ரன்களை நாங்கள் எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் தற்போது நாங்கள் எடுக்கும் ஸ்கோர்களுக்கு பந்துவீச்சாளர்கள் வெற்றியைத் தேடித்தர சிரமப்படுவார்கள். 

முதலில் பேட்டிங் செய்தால் பெரிய ஸ்கோரை எடுத்து பந்துவீச்சாளர்கள் வெற்றி வாய்ப்பை உருவாக்க வழிசெய்யவேண்டும். இரண்டாவது பேட்டிங் செய்யும்போது, எதிரணியை விடவும் அதிக ரன்கள் எடுத்து முன்னிலை பெறவேண்டும். அல்லது அவர்களுடைய ஸ்கோருக்கு அருகிலாவது செல்லவேண்டும். இதன்மூலம் இரண்டாவது இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்தமுடியும். பேட்டிங் குழு அதிக முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று நிச்சயம் சொல்வேன். அதேசமயம் எந்தவொரு குறிப்பிட்ட வீரரையும் குறிப்பிட்டுச் சொல்லி, அவர் என்ன செய்யவேண்டும் எனச் சொல்லமாட்டேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com