Enable Javscript for better performance
காமன்வெல்த்: சகினா பங்கேற்க ஐஓஏ முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    இந்தியா பாரா பளுதூக்குதல் வீராங்கனை சகினா காட்டுனை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்குமாறு போட்டி ஒருங்கிணைப்பு அமைப்பை இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) மற்றும் பாராலிம்பிக் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளன.
    2014 காமல்வெல்த் போட்டியில் 61 கிலோ வரையிலான பிரிவில் வெண்கலம் வென்ற சகினா, இந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க தனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அத்துடன், இந்த விவகாரத்தில் தலையிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
    இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க சகினா தகுதியுள்ளவர் என்றும், பட்டியல் தயாரிக்கும் பணியில் பிழையின் காரணமாக சகினாவின் பெயர் விடுபட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ள இந்திய ஒலிம்பிக் சங்க செயலர் ராஜீவ் மேத்தா, போட்டி ஒருங்கிணைப்பாளர்களின் பதிலுக்கு காத்திருப்பதாக கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai