Enable Javscript for better performance
செய்திகள் சில வரிகளில்...- Dinamani

சுடச்சுட

    
    • வேதாந்தா இந்திய ஸ்குவாஷ் ஓபன் போட்டியில் இந்தியாவின் ஹரிந்தர் பால் சாந்து 11-7, 12-10, 5-11, 11-8 என்ற செட்களில் இங்கிலாந்தின் நாதன் லேக்கை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
    • கிரிக்கெட்டுடனான தனது தொடர்பு இறுதிக்கு வந்துவிட்டதாகவும், விரைவில் ஓய்வு முடிவை அறிவிக்கப்போவதாகவும் இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா கூறியுள்ளார்.
    • தென் கொரியாவில் நடைபெறும் பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமையை ஜியோ தொலைக்காட்சி பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்தது.
    • பியோங்சாங் ஒலிம்பிக்கில் பங்கேற்க, தங்கள் மீதான தடையை ரத்து செய்யுமாறு 13 ரஷிய வீரர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விளையாட்டுகளுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    • காயத்தில் இருந்து மீண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ், இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கேற்கிறார்.
    • இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு (இந்தியா, வங்கதேசம், இலங்கை) டி20 கிரிக்கெட் தொடருக்கான கோப்பையை ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனம் வழங்குகிறது.
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai