Enable Javscript for better performance
விஜய் ஹஸாரே: தமிழகத்துக்கு 2-ஆவது தோல்வி- Dinamani

சுடச்சுட

    

    விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தமிழகத்தை வீழ்த்தியது. இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழகத்துக்கு இது 2-ஆவது தொடர் தோல்வியாகும்.
    சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய தமிழகம் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை 48.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து வென்றது.
    முன்னதாக, டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து பேட் செய்த தமிழக அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டும் அதிகபட்சமாக ஒரு பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்தார். இதர வீரர்கள் அதற்கு குறைவான ரன்களில் வீழ்ந்தனர். மும்பை தரப்பில் தவல் குல்கர்னி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
    பின்னர் 184 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய மும்பை அணியில் ஷுபம் ரஞ்சனே அதிகபட்சமாக 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 59 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரோடு ஷிவம் மல்ஹோத்ரா ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தமிழக தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    தமிழகம் தனது அடுத்த ஆட்டத்தில் மத்திய பிரதேசத்தை 
    வெள்ளிக்கிழமை சந்திக்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai