தெ.ஆ. முன்னாள் வீரர் கிப்ஸ் மீது அஸ்வின் திடீர் ஆவேசம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

ட்விட்டர் தளத்தில் நைக் ஷூ-வுக்கான விளம்பர ட்வீட் ஒன்றை வெளியிட்டார் அஸ்வின்... 
தெ.ஆ. முன்னாள் வீரர் கிப்ஸ் மீது அஸ்வின் திடீர் ஆவேசம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

இது எதிர்பாராத மோதல். அஸ்வினிடமிருந்து ரசிகர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. 

ட்விட்டர் தளத்தில் நைக் ஷூ-வுக்கான விளம்பர ட்வீட் ஒன்றை வெளியிட்டார் அஸ்வின். மிக அற்புதமான ரன்னிங் ஷூ என்று பாராட்டி ட்வீட் வெளியிட்டார்.

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் கிப்ஸ், இதற்குப் பதில் அளித்தார். இப்போது இன்னும் வேகமாக ஓடுவீர்கள் என்று அவர் கிண்டலாக ட்வீட் செய்ததை அஸ்வின் ரசிக்கவில்லை எனத் தெரிகிறது.

அதற்குப் பதிலடி தரும்விதமாக ட்வீட் செய்த அஸ்வின் கூறியதாவது: நிச்சயமாக உங்களைப் போன்று வேகமாக ஓடமுடியாது. உங்களைப் போன்று நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் அல்லன். ஆனால் எனக்கு உணவு தரும் தொழிலில் மேட்ச்சுகளை ஃபிக்ஸிங் செய்யக்கூடாது என்கிற நன்னடத்தை நெறிகள் கொண்டவனாக ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன் என்றார்.

தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஹான்ஸி குரோனியே-வுடன் இணைந்து மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கிப்ஸ் மீது ஒரு புகார் உண்டு. இதை முன்னிட்டு தன் ட்வீட்டில் அவ்வாறு எழுதினார் அஸ்வின். இவரிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பாராத ரசிகர்கள் பலரும், அஸ்வினின் இந்த ட்வீட்டுக்குக் கண்டனம் தெரிவித்தார்கள்.

ஆனால் இந்தச் சூடான விவாதத்தை கிப்ஸ் முன்னெடுத்துச் செல்ல முயலவில்லை.

என் நகைச்சுவையை உங்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை. இதிலிருந்து விலகிக்கொள்கிறேன் என்று பிரச்னையை ஒரேடியாக முடித்துக்கொண்டார்.

கடைசியாகப் பதில் அளித்த அஸ்வின், என் பதிலும் நகைச்சுவை தான் என நம்புகிறேன். ஆனால் மக்களும் நீங்களும் அதை எப்படி எடுத்துக்கொண்டீர்கள் பாருங்கள். இதுபோன்ற நகைச்சுவைகளுக்கு நான் எப்போதும் தயாராக இருப்பேன். இதுகுறித்து டின்னரில் ஒருநாள் பேசலாம் எனப் பதில் அளித்து உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதன்பிறகு கிப்ஸுக்கு எதிரான அந்த ட்வீட்டை டெலிட் செய்துவிட்டார் அஸ்வின். என்னுடைய உணர்வுபூர்வமான ஒரு விஷயம் உங்களுக்கு அப்படி இருக்காது. உங்களுக்கு அப்படி இருக்கும் ஒரு விஷயம் எனக்கு அதுபோல தோன்றாது. என் குடும்பமாக உள்ள ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். எனவே அந்த ட்வீட்டை நீக்கிவிட்டேன். என் வெறுப்பாளர்களுக்குப் பொழுதுபோக்கு முடிந்தது. பிறகு பார்க்கலாம் என்று கடைசியாக ஒரு விளக்கமும் கொடுத்தார் அஸ்வின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com