விம்பிள்டன் மகளிர் ஒற்றையர்: இறுதிப்போட்டியில் செரீனா, கெர்பர் மோதல்

விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் டென்னிஸின் அரையிறுதியில் ஜூலியா ஜார்ஜஸை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
விம்பிள்டன் மகளிர் ஒற்றையர்: இறுதிப்போட்டியில் செரீனா, கெர்பர் மோதல்

விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் டென்னிஸின் அரையிறுதியில் ஜூலியா ஜார்ஜஸை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன், மகளிர் ஒற்றையர் 2-ஆவது அரையிறுதி போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ஜெர்மன் வீராங்கனை ஜூலியா ஜார்ஜஸ் ஆகியோர் மோதினர். 

இந்த போட்டியில் செரீனா வில்லியம்ஸ் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி விளையாடினார். அதன்மூலம் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து, ஜார்ஜஸ் 2-ஆவது செட்டில் எழுச்சி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் செரீனாவுக்கு பெரிதளவு நெருக்கடி கொடுக்கவில்லை.

2-ஆவது செட்டிலும் செரீனா வில்லியம்ஸ் வெற்றி கண்டார். இதன்மூலம், செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

விம்பிள்டனில் செரீனா வில்லியம்ஸ் இதுவரை தொடர்ச்சியாக 20 போட்டிகளில் வெற்றி பெற்று வெற்றி நடை போட்டு வருகிறார். இறுதிப்போட்டியிலும் அந்த வெற்றி நடை தொடரும் என்ற முனைப்பில் அவர் களமிறங்குகிறார். விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை செரீனா கைப்பற்றும் பட்சத்தில் அது அவர் வெல்லும் 24-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.    

முன்னதாக நடைபெற்ற முதல் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் மற்றொரு ஜெர்மன் விராங்கனை ஏஞ்சலிக் கெர்பர், லாத்வியா வீராங்கனை ஓஸ்தபென்கோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

இதன்மூலம் சனிக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் செரீனா வில்லியம்ஸும், ஏஞ்சலிக் கெர்பரும் மோதவுள்ளனர்.

2016-ஆம் ஆண்டு விம்பிள்டன் மகளிர் ஒற்றைர் இறுதிப்போட்டியில் இதே செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஏஞ்சலிக் கெர்பர் மோதினர். அதில், செரீனா 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்றது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com