உலகக் கோப்பை கால்பந்து: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குரோஷியா

குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
உலகக் கோப்பை கால்பந்து: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குரோஷியா

மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி அரங்கில் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் குரோஷியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்த ஆட்டத்தில் 5வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை பயன் படுத்தி கெய்ரன் டிரிப்பியர் கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தில் முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இதனையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 68-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் ஒரு கோல் அடித்தார். இதனால் இரண்டாவது பாதி ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தது. இதனால் கூடுதல் நேரம் 30 நிமிடம் வழங்கப்பட்டது. இந்த கூடுதல் நேரத்தில் 109 வது நிமிடத்தில் குரேஷியா வீரர் மாரியோ ஒரு கோல் அடித்தார். மேலும் ஆட்டத்தில் இறுதி வரை இங்கிலாந்து அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாததால் குரேஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மாஸ்கோவில் ஜுலை 15ல் நடை பெறும் இறுதிப் போட்டியில்  பிரான்ஸ் அணி குரோஷியா அணியுடன்  மோத உள்ளது.
குரோஷியாஅணி இறுதிப் போட்டிக்கு முதன் முறையாக தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com