தாய்லாந்து வீரர்களுக்கு வெற்றி சமர்ப்பணம்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதியில் பெற்ற வெற்றியை, தாய்லாந்தில் குகைக்குள் சிக்கி பெரும் போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்ட கால்பந்து வீரர்களுக்கு சமர்ப்பிப்பதாக பிரான்ஸ் கால்பந்து
தாய்லாந்து வீரர்களுக்கு வெற்றி சமர்ப்பணம்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதியில் பெற்ற வெற்றியை, தாய்லாந்தில் குகைக்குள் சிக்கி பெரும் போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்ட கால்பந்து வீரர்களுக்கு சமர்ப்பிப்பதாக பிரான்ஸ் கால்பந்து வீரர் பால் போக்பா கூறியுள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று, முதல் அணியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. பிரான்ஸ் சார்பில் சாமுவேல் உமிதிதி கோலடித்தார்.
இந்நிலையில், ஆட்டம் முடிந்த சிறிது நேரத்தில் பிரான்ஸ் நடுகள வீரர் பால் போக்பா, தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட கால்பந்து வீரர்களைக் குறிப்பிட்டு தனது சுட்டுரைப் பக்கத்தில், எங்களது இந்த வெற்றி இன்றைய தினத்தின் ஹீரோக்களுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. சிறப்பாகச் செயல்பட்ட நீங்கள், பலம் மிக்கவர்கள்' என்று பதிவிட்டார். அத்துடன் மீட்கப்பட்ட தாய்லாந்து கால்பந்து வீரர்களின் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டிருந்தார்.
தாய்லாந்து நாட்டில் இளம் கால்பந்து வீரர்கள் 12 பேர், அவர்களது பயிற்சியாளர் என 13 பேர் குகை ஒன்றுக்குள் சிக்கிக் கொண்டனர். 17 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் ஒவ்வொரு பிரிவாக பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், மீட்கப்பட்ட அந்த வீரர்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்றை காண ஃபிஃபா அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. எனினும், உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெற்றுவருவதால் அவர்களால் இறுதிச்சுற்றை நேரில் காண ரஷியா வர இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com