செர்பிய யூத் குத்துச் சண்டை: இறுதியில் 13 இந்திய வீரர்கள்

செர்பியாவின் சுபோட்டிகா நகரில் நடந்து வரும் 36-ஆவது கோல்டன் குளோவ் யூத் குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீரர்கள் 13 பேர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
செர்பிய யூத் குத்துச் சண்டை: இறுதியில் 13 இந்திய வீரர்கள்

செர்பியாவின் சுபோட்டிகா நகரில் நடந்து வரும் 36-ஆவது கோல்டன் குளோவ் யூத் குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீரர்கள் 13 பேர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
மகளிர் பிரிவில் யூத் உலக சாம்பியன் ஜோதி குலியா (51 கிலோ), நிது (48 கிலோ), திவ்யா பவார் (54 கிலோ), மனிஷா (64 கிலோ), லலிதா (69 கிலோ), நேஹா யாதவ் (81 கிலோ) ஆகியோர் இறுதிக்கு முன்னேறினர்.
ஆடவர் பிரிவில் ஆகாஷ் குமார் (56 கிலோ), அங்கித் (60 கிலோ), ஆகாஷ் (64 கிலோ), விஜயதீப் (69 கிலோ), நிதின் குமார் (75 கிலோ), பாருன் சிங் (49) கிலோ), அமான் (91 கிலோ) ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதன் மூலம் அனைவரும் குறைந்தது வெள்ளிப் பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.
அதே நேரத்தில் அரையிறுதிச் சுற்றில் தோல்வியுற்ற சாக்ஷி (51 கிலோ), கைதானி (81 கிலோ), பவேஷ் கிட்டாமணி (52 கிலோ), ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

  • நெதர்லாந்து ஆன்ட்வெர்ப் நகரில் நடந்து வரும் 23 வயதுக்குட்பட்டோர் 6 நாடுகள் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய ஜூனியர் அணி 1-0 என கிரேட் பிரிட்டனை வென்றது. முன்னதாக அயர்லாந்தை 4-1 என வென்றிருந்த இந்திய மகளிர் அணி அடுத்த ஆட்டத்தில் பெல்ஜிய அணியை எதிர்கொள்கிறது.
  • மாட்ரிட் நகரில் நடைபெற்ற ஸ்பெயின் கிராண்ட்பிரீ மல்யுத்தப் போட்டியில் இந்திய மல்யுத்த நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகட் தங்கப் பதக்கம் வென்றார். 50 கிலோ பிரிவில் இறுதி ஆட்டத்தில் கனடாவின் நடாஷா பாக்ûஸ 10-0 என்ற கணக்கில் வென்று வினேஷ் போகட் தங்கம் வென்றார். ஆசியப் போட்டிக்கு தயாராகும் வகையில் வினேஷ் இந்த போட்டியில் பங்கேற்றிருந்தார்.
  • செக். குடியரசு பிùஸன் நகரில் நடந்து வரும் ஷூட்டிங் ஹோப்ஸ் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய இளம் வீராங்கனை மனு பாக்கர், அன்மோல் ஜெயின் ஆகியோர் கலப்பு அணிகள் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளனர். பாக்கர் ஏற்கெனவே இந்த போட்டியில் 4 தங்கம் வென்றார். இப்போட்டியில் இந்திய அணி 11 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
  • ஜாகர்த்தாவில் நடந்து வரும் ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. கொரியாவிடம் 1-4 என தோற்ற நிலையிலும் அப்பிரிவில் 2-ஆம் இடம் பெற்றதால் காலிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. பலமான ஜப்பான் அணியை அடுத்த சுற்றில் இந்தியா எதிர்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com