56 வருடங்களுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் மூன்று தமிழக வீரர்கள்!

கடந்த வருடம் உள்ளூர் போட்டிகளில் தமிழக அணி சிறப்பாக விளையாடியதால் அதற்கான பலன்...
56 வருடங்களுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் மூன்று தமிழக வீரர்கள்!

இந்திய டெஸ்ட் அணியில் கடந்த சில வருடங்களாக முரளி விஜய்யும் அஸ்வினும் இடம்பிடித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று கூடுதலாக மற்றொரு தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்கும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து 56 வருடங்களுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் மூன்று தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

கடைசியாக 1961-ல் மும்பையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கிரிபால் சிங், மில்கா சிங், விவி குமார் ஆகிய மூன்று தமிழக வீரர்கள் இடம்பெற்றார்கள். அதன்பிறகு பெங்களூரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இன்று தொடங்கிய டெஸ்ட் போட்டியில்தான் மூன்று தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்கள். 

இதற்கு முன்பு இந்திய அணி பங்கேற்ற நிடாஹஸ் கோப்பை முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியிலும் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் என மூன்று தமிழக வீரர்கள் இடம்பெற்றார்கள். அந்தப் போட்டியின் இரு முக்கியமான விருதுகள் தமிழ்நாட்டு வீரர்களுக்கே வழங்கப்பட்டன. தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன் ஆனார். 18 வயது வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகன் விருதைப் பெற்றார். மூவருமே அந்தப் போட்டியின் 5 ஆட்டங்களிலும் விளையாடி தங்கள் திறமையை நிரூபித்தார்கள்.

கடந்த வருடம் உள்ளூர் போட்டிகளில் தமிழக அணி சிறப்பாக விளையாடியதால் அதற்கான பலன் இந்த வருடம் கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com