வரலாற்று டெஸ்ட்: இந்தியா-ஆப்கானிஸ்தான் மோதல் இன்று தொடக்கம்

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கர்நாடக மாநிலம் பெங்களூரில் வியாழக்கிழமை தொடங்குகிறது. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றி முதல் முறையாக
வரலாற்று டெஸ்ட்: இந்தியா-ஆப்கானிஸ்தான் மோதல் இன்று தொடக்கம்

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கர்நாடக மாநிலம் பெங்களூரில் வியாழக்கிழமை தொடங்குகிறது. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றி முதல் முறையாக ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதம் மற்றும் போரிலிருந்து மீண்டு வரும் ஆப்கானிஸ்தான், சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டியில் தடம் பதிப்பது கிரிக்கெட் சமூகத்தினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 
ஆப்கானிஸ்தானுக்கு அரசு ரீதியாக இந்தியா பல்வேறு உதவிகள் செய்து வரும் நிலையில், அந்நாடு தனது கிரிக்கெட் மைதானங்களை மேம்படுத்திக் கொள்ள பிசிசிஐ உதவியுள்ளது.
அந்நாட்டு அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சர்வதேச அனுபவத்தை பெற இந்தியாவுடன் மோதும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
மேலும், இந்தியா வரும் இதர நாட்டு அணிகள் ஆப்கானிஸ்தானுடன் ஓர் பயிற்சி ஆட்டத்தில் ஆடவும் பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது.
ஆஷ்கர் ஸ்டானிக்ஸாய் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கான், முஜீப் ஜத்ரான்ஸ், முகமது ஷாஸாத்ஸ் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள், டி20 போட்டிகளில் முன்னேறிவரும் போதிலும், அவர்களுக்கான உண்மையான சோதனைக் களம் டெஸ்ட் போட்டியாகவே இருக்கும்.
களத்தில் இறங்கி ஆடத் தொடங்கும் வரையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எவ்வாறு இருக்கும் என்பதை ஆப்கானிஸ்தான் அறிந்துகொள்ள இயலாது' என்று அணியின் பயிற்சியாளர் ஃபில் சிம்மன்ஸ் கூறியுள்ளார். மறுமுனையில் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா, கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் இன்றி, அஜிங்க்ய ரஹானே தலைமையில் களம் காண்கிறது.
முக்கியமான இங்கிலாந்து தொடர் தொடங்கும் முன்பாக இந்த ஆட்டம், இந்தியாவுக்கு முன்னோட்டமாக இருக்கும்.
அணிகள் விவரம்
இந்தியா
அஜிங்க்ய ரஹானே (கேப்டன்), ஷிகர் தவன், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, லோகேஷ் ராகுல், கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டியா, ஷர்துல் தாக்குர், நவ்தீப் சைனி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்.
ஆப்கானிஸ்தான்
ஆஷ்கர் ஸ்டானிக்ஸாய் (கேப்டன்), முகமது ஷாஸாத், ஜாவத் அஹ்மதி, ரஹ்மத் ஷா, இஷானுல்லா ஜனத், நாசிர் ஜமால், ஹஷ்மதுல்லா ஷாஹிதி, அஃப்சர் ஜஜாய், முகமது நாபி, ரஷீத் கான், ஜாஹிர் கான், ஆமிர் ஹம்ஸா ஹோதக், சையது அகமது ஷிர்ஸாத், யாமின் அஹ்மத்ஸாய் வஃபாதர், முஜீப் உர் ரஹ்மான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com