ஷபோவலோவை வீழ்த்தினார் பிரஜனேஷ்

ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-ஆவது சுற்றில் இந்தியாவின் பிரஜனேஷ் குண்ணேஸ்வரன்-கனடாவின் டெனிஸ் ஷபோவலோவிற்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.
ஷபோவலோவை வீழ்த்தினார் பிரஜனேஷ்

ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-ஆவது சுற்றில் இந்தியாவின் பிரஜனேஷ் குண்ணேஸ்வரன்-கனடாவின் டெனிஸ் ஷபோவலோவிற்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.
உலகத் தரவரிசையில் 169-ஆவது இடத்தில் இருக்கும் பிரஜனேஷ், உலகின் 23-ஆம் நிலை வீரரும், போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருந்தவருமான டெனிஸை 7-6(8/6), 2-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். பிரஜனேஷ் தனது டென்னிஸ் வரலாற்றில் முதல் முறையாக தரவரிசையில் 169-ஆவது இடத்தை கடந்த வாரம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
அவர் தனது 4-ஆவது சுற்றில் உலகின் 75-ஆம் நிலை வீரரான ஆர்ஜென்டீனாவின் குய்டோ பெல்லாவை எதிர்கொள்கிறார்.
இப்போட்டியின் 4-ஆவது சுற்றில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் மிஸ்கா ஸ்வெரேவை வீழ்த்தினார். போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருக்கும் கனடாவின் மிலோஸ் ரயோனிச் 7-6(10/8), 6-2 என்ற செட்களில் போஸ்னிய வீரர் மிர்ஸா பேசிச்சை வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com