Enable Javscript for better performance
ஐபிஎல்: காயம் காரணமாக மிட்செல் ஸ்டார்க் விலகல்- Dinamani

சுடச்சுட

    
    mitchell

    வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (28) விலகுவதாக அறிவித்துள்ளார்.
    ஜோகன்னஸ்பர்க் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக 30 வயது வேகப்பந்து வீச்சாளரான சட் சாயர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலிய நிர்வாகம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், 'தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த பிறகு ஸ்டார்க் மேல் சிகிச்சைக்காக நாடு திரும்புவார். ஐபிஎல் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஸ்டார்க்கை ரூ.9.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai