Enable Javscript for better performance
கோல்டுகோஸ்ட்: தமிழக வீரர் சரத் கமல் தலைமையிலான குழு புறப்பட்டது- Dinamani

சுடச்சுட

    

    கோல்டுகோஸ்ட்: தமிழக வீரர் சரத் கமல் தலைமையிலான குழு புறப்பட்டது

    By DIN  |   Published on : 31st March 2018 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sharath

    ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமல் (35) தலைமையிலான 9 பேர் கொண்ட குழு வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றது.
    டேபிள் டென்னிஸில் மூன்று முறை தங்கம் வென்றுள்ள சரத் கமல், ஆடவர் குழு பயிற்சியாளர் மஸிமோ காஸ்டான்டினி, மகளிர் குழு பயிற்சியாளர் சௌம்யாதீப் ராய் உள்ளிட்டோர் உடன் சென்றனர். பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கிய முன்னணி வீரரான சௌம்யாஜித் கோஷின் பெயர் கோல்டுகோஸ்ட் வீரர்கள் பட்டியலில் இருந்து கடைசி நேரத்தில் நீக்கப்பட்டது.
    'குறைந்தது 4 பதக்கங்களையாவது நமது வீரர்கள் வெல்வார்கள்' என்று காஸ்டான்டினி நம்பிக்கை தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai