Enable Javscript for better performance
சந்தோஷ் டிராபி கால்பந்து: இறுதி ஆட்டத்தில் மேற்கு வங்கம்-கேரளம் மோதல்- Dinamani

சுடச்சுட

    

    சந்தோஷ் டிராபி கால்பந்து: இறுதி ஆட்டத்தில் மேற்கு வங்கம்-கேரளம் மோதல்

    By DIN  |   Published on : 31st March 2018 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    santhosh-traphoy

    வெற்றி மகிழ்ச்சியில் மேற்கு வங்க வீரர்கள்.

    தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியான சந்தோஷ் டிராபி போட்டியின் அரையிறுதியில் கர்நாடக அணியை 2-0 என்ற கோல் கணக்கில் மேற்கு வங்கம் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.
    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் கேரள அணி மிúஸாரமை வீழ்த்தியது. இதையடுத்து, இறுதி ஆட்டத்தில் கேரள அணியை மேற்கு வங்கம் எதிர்கொள்கிறது.
    கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மேற்கு வங்க அணியின் கேப்டன் ஜிதன் முர்மு, தீர்த்தங்கர் சாரக்கர் ஆகியோர் இரண்டாவது பாதியில் அடுத்தடுத்து 2 கோல்களைப் பதிவு செய்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
    முதல் பாதி ஆட்டத்தில் இரண்டு அணிகளுமே கோல் எதுவும் பதிவு செய்யவில்லை. இதையடுத்து, 2-ஆவது பகுதி ஆட்டம் பரபரப்பாக நகர்ந்தது. 57-ஆவது நிமிடத்தில் ஜிதன் முர்மு முதல் கோலைப் பதிவு செய்தார். இறுதிகட்டத்தில் (90+2) அந்த அணியின் மற்றொரு வீரரான தீர்த்தங்கர் சாரக்கர் 2-ஆவது கோலைப் பதிவு செய்தார்.
    கேரளம் வெற்றி: இதனிடையே, மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் கேரள அணி 1-0 என்ற கோல் கணக்கில் மிúஸாரமை வீழ்த்தியது. நடப்பு சாம்பியனான மேற்கு வங்கம், கேரளத்துடன் ஏப்ரல் 1-ஆம் தேதி இறுதி ஆட்டத்தில் எதிர்கொள்கிறது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai