Enable Javscript for better performance
நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்: முதல் நாளில் இங்கிலாந்து 290/8- Dinamani

சுடச்சுட

    

    நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்: முதல் நாளில் இங்கிலாந்து 290/8

    By DIN  |   Published on : 31st March 2018 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    boult

    விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் டிரென்ட் போல்ட்.

    நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தின் முதல் நாளில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 290 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.
    இங்கிலாந்து அணி நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் ஆட்டங்கள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
    கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் தொடங்கி, கடந்த 10-ஆம் தேதி முடிந்த 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
    இதையடுத்து, கடந்த 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் 2 நாள் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்துடன் நியூஸிலாந்து லெவன் அணி மோதியது. இதனைத் தொடர்ந்து, கடந்த 22-ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
    இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் கிறைஸ்ட்சர்ச் நகரில் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்குத் தொடங்கியது. டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்து வீசத் தீர்மானித்தது.
    அதைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்களை எடுத்துள்ளது.
    விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவ் 154 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். அவருடன் பந்துவீச்சாளர் ஜாக் லீச் 10 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
    இவ்வாறாக முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்துள்ளது.
    நியூஸிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சௌதி 23 ஓவர்கள் வீசி 60 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட் 25 ஓவர்கள் வீசி 79 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இரண்டாவது நாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai