Enable Javscript for better performance
முத்தரப்பு மகளிர் டி20 தொடர் இறுதி ஆட்டம்: இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இன்று மோதல்- Dinamani

சுடச்சுட

    

    முத்தரப்பு மகளிர் டி20 தொடர் இறுதி ஆட்டம்: இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இன்று மோதல்

    By DIN  |   Published on : 31st March 2018 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முத்தரப்பு மகளிர் டி20 தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மும்பையில் சனிக்கிழமை மோதுகின்றன.
    கடந்த 22-ஆம் தேதி முதல் டி20 ஆட்டங்கள் மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறவில்லை.
    முதல் ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. அதில், ஆஸ்திரேலிய மகளிர் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றனர். 2-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் இந்தியா தொடர்ந்து 3 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
    6-ஆவது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் மட்டும் இந்தியா ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது. ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 வெற்றிகளையும், இங்கிலாந்து மகளிர் அணி 2 வெற்றிகளுடனும் களத்தில் உள்ளன. மும்பையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது. 
    இரு அணிகளும் சம பலத்துடன் திகழ்வதால் தொடரைக் கைப்பற்றப்போவது எந்த அணி? என்பதில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மகளிர் கிரிக்கெட்டிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai